தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.11

தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி


அமெரிக்காவில் கல்வி கற்று வரும் இந்திய தூதுவ உயரதிகாரி ஒருவரின் மகளான கிருத்திகா பிஸ்வாஸ் (Krittika Biswas) (18), தன்னை தவறாக கைது செய்த காவற்துறையினரை கண்டித்து 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நியூயோர்க்கின் குயீன்ஸில் இல் அமைந்துள்ள John Powne உயர்தர
பாடசாலையில் கலவி கற்றுவரும் கிருத்திகா, CyberBullying (தொடர்ச்சியாக ஒருவரை இடையூறு செய்யும் தொடர்பாரல்) மூலம், தனது பாடாசாலை ஆசிரியருக்கு பயமுறுத்தும் மின் அஞ்சல்களை அனுப்பியதாக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த பெப்ரவரி 8ம் திகதி பாடசாலையில் வைத்து அவர் விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
அன்றிரவு முழுவதும் கிருத்திகா சிறையில் இருந்தார். அங்கு அவர் கழிவறை உபயோகிக்க கூட நீண்டநேரமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், HIV தொற்றிருப்பவர்களுடனுமே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். சுத்தமான குடிநீர் அவருக்கு கொடுக்கப்படவில்லை.

பாடசாலையிலிருந்தும் அவர் இடைநிறுத்தப்பட்டார். இந்நிலையில் கிருத்திக குறித்த மின்னஞ்சல்களை அனுப்பவில்லை எனவும், சீன மாணவர் ஒருவரே இக்குற்றத்தை செய்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து 24 மணிநேரத்தில் கிருத்திகா விடுவிக்கப்பட்டார்.

எனினும் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில்,  சிறையில் தனக்கு விளைவிக்கப்பட்ட இன்னல்களுக்கும் தனது மன, உடல் பாதிப்புக்கும் காவற்துறையினரும், நியூயோர்க் மேஜரான Michael Bloomberg அவர்களும் பதில் சொல்லியாக வேண்டுமென, 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக கேட்டு நியூயோர்க் நீதிமன்றில் கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார்.

'சிறைக்கு சென்று வந்துள்ளாய் உனக்கு வெட்கமாக இல்லையா?' என ஒரு குற்றமும் செய்யாத என்னை பாடசாலை நண்பர்கள் கேலி செய்கின்றனர். எனவும் இச்சமூகத்தில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இருந்த நல்ல மதிப்பினை சீர்குலைக்கும் முயற்சியாக இது அமைந்துவிட்டது என கிருத்திகா தெரிவித்தார்.

ஒருவரை கைது செய்யமுன் அவரா அக்குற்றத்தை செய்தார் என்பதை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென அவருடைய வக்கில் ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.

அவருடைய தந்தையார் டெபாஷிஷ் பிஸ்வாஸ், மேன்ஹட்டனில் உள்ள இந்திய துணைதூதரகத்தில், துணைத்தூதராக இருக்கிறார். இந்தியர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியினால், காவற்துறை இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என விமர்சனம் தற்போது எழுந்துள்ளது. இதற்கு நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்ததே சரியான பதிலடியாக இருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: