போர் நடவடிக்கைகளின் போது, புலனாய்வு செய்வதற்காகவும், மீட்பு நடவடிக்கைகளுக்காகயும் நாய்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், தனது நாசிப்படையிலிருந்த நாய்களுக்கென ஒரு பாடசாலையையே பயன்படுத்தியிருக்கிறார் என்பது வழக்கத்திற்கு மாறானது தானே!

ஆம்! இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஹிட்லர் வளர்த்த நாய்களுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. Cardiff University ஐ சேர்ந்த Dr. Jan Bondeson என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

மூனிச்சில் நடந்த் ஆய்வில் மனிதனுடன் உடையாடும் நாய்
ஆய்வறிக்கை முடிவின் படி,
ஹிட்லர் உருவாக்கிய நாய்ப்படையில் உள்ள நாய்களுக்கு, நாசி இராணுவ தலைமை அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் வகையில் உரையாடல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கென திறக்கப்பட்ட நாய் பாடசாலை 'Tier Sperchuschule ASRA' என அழைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் லௌதென்பேர்க், ஹானோவர் பகுதிகளில் இப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி எடுத்துக்கொண்ட அதிக நுண்ணறிவை கொண்ட நாய்கள் தங்களது பாதங்களை தட்டி பேசவும், குரல் வடிவில் சில உணர்ச்சிகளை பரிமாறக்கொள்ளவும் செய்துள்ளன. அரிச்சுவடி எழுத்துக்களை கற்றுக்கொண்ட இந்நாய்கள் தங்களது பாத அசைவுகளுக்கு ஏற்ப அவற்றை உச்சரித்து உணர்ந்துகொள்ளவும் செய்துள்ளன.

ஹிட்லரின் பேசும் நாய்கள்
இரண்டாம் உலக யுத்ததில் ஜேர்மனிய நாசி படைகள் பெற்ற வெற்றிகளுக்கு இந்நாய்கள் பெரும் உதவி செய்திருக்கின்றன என Bondeson கூறுகிறார்.
ஹிட்லருக்கு செல்லப்பிராணியாக நாய்கள் வைத்திருப்பதது அலாதிப்பிரியம் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். Blondi மற்றும் Bella எனும் இரு ஜேர்மன் ஷெபெர்ட் நாய்களை வளர்த்த அவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் Blondi ஐ சுட்டுக்கொன்றார் என்கிறது வரலாறு.
படங்கள் : BNPS CO.UK

0 கருத்துகள்:
கருத்துரையிடுக