
மரணதண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு குற்றவாளிகளின் கருணை மனுக்களை இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துள்ளார். இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1993ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில், பஞ்சாப்பை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர் பால்சிங் பல்லார் கருணை மனு அளித்தார். கடந்த 7 1/2 (ஏழரைஆண்டுகளாக) ஜனாதிபதியின் பரிசீலணையில் இருந்து வந்த இக்கருணை மனுவை நேற்று, குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்டார்.
இதே போன்று கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்ற அசாமை சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவனுடைய கருணை மனுவையும் அவர் நிராகரித்துவிட்டார்.
இறுதியாக 2004ம் ஆண்டு தனஞ்சய் சட்டர்ஜி
என்பவனின் கருணை மனு, ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவன் துக்கிலிடப்பட்டான். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள இரு கருணை மனுக்களுக்கு அடுத்து, அவர்களும் விரைவில் தூக்கிலிடப்படவிருக்கின்ரனர். இதையடுத்து ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கில், மரண தண்டனை பெற்ற 3 பேரின் கருணை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன. அதன் பின் பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு பரிசீலக்கப்படவிருக்கிறது.இதே போன்று கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்ற அசாமை சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவனுடைய கருணை மனுவையும் அவர் நிராகரித்துவிட்டார்.
இறுதியாக 2004ம் ஆண்டு தனஞ்சய் சட்டர்ஜி
மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பிலிருந்து வரும் இக்கருணை மனுக்கள் அவற்றின் வரிசை எண் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனினும் கருணை மனுக்கள் பரிசீலனையில் நீண்ட தாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருப்பதும், அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பர்ம் கருணை மனு மீது முடிவு எடுப்பதற்கான கால வரம்பு எதுவும் இல்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக