தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.11

ஈரான்-எகிப்து உறவு வலுப்பெறுகிறது


மஸ்கட்:32 வருடங்களுக்கு பிறகு முறிந்து போன ஈரான்-எகிப்து இடையேயான உறவு வலுப்பெறுகிறது. இரு நாடுகளிலும் தூதரகங்களை திறப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி தீவில் இம்மாதம் இறுதியில் நடை பெறவிருக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கிடையே இருநாடுகளின் நட்புறவு மேம்படுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

எகிப்திய வெளியுறவு அமைச்சர் நபீல் அல் அரபியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் இவ்விஷயத்தில் ஒத்தக்கருத்து ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். அணிசேரா நாடுகளின் மாநாடு ஈரானுடனான உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு என அல் அரபி தெரிவித்தார். எகிப்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆட்சிபுரிந்த ஹுஸ்னி முபாரக் வெளியேறிய பிறகு இரு நாடுகளும் உறவை புனரமைக்க தீர்மானித்தன.
1978-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எகிப்துடனான உறவை ஈரான் முறித்துக்கொண்டது. ஈரான் வெளியேற்றிய முஹம்மது ரஸா பஹ்லவிக்கு எகிப்து புகலிடம் அளிக்க வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான உறவு முற்றிலும் முறிந்திருந்தது

0 கருத்துகள்: