தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.11

உஸாமா படுகொலை:அமெரிக்காவிற்கு தோல்வி-ஈரான்


டெஹ்ரான்:நிராயுதபாணியான உஸாமா பின் லேடனை மர்மமான முறையில் கொலை செய்த அமெரிக்காவின் செயலை பெரும் வெற்றியாக கருதவியலாது என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஹ்மத் வஹீதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தோல்வி தான் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே
பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரை கொலை செய்ய சராசரியாக 1000 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவழித்துள்ளது. அவ்வாறெனின்ல் உஸாமாவின் கொலை வெற்றி எனக் கூறுவதில் என்ன பொருள் உள்ளது என அஹ்மத் வஹீதி கூறினார். உஸாமாவின் உடலை கடலில் வீசிய தகவலும் சந்தேகத்தை கிளப்புவதாக வஹீதி தெரிவித்தார்.

0 கருத்துகள்: