தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.11

உஸாமாவைக்குறித்து 10 பொய்க்கதைகள்


லண்டன்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடனைக் குறித்து ஊடகங்களும், பல்வேறு அரசு ஏஜன்சிகளும் வெளியிட்டுள்ள கதைகளில் பெரும்பாலானவை பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. உஸாமாவைக் குறித்து பிரசுரிக்கப்படும் முக்கியமான 10 பொய்க்கதைகளும் அவற்றின் விளக்கங்களும் பின்வருமாறு:
1.உஸாமாவை உருவாக்கியது சி..
1980களில் உஸாமா பின் லேடனுக்கோ அவருடைய ஆதரவாளர்களுக்கோ ஒருபோதும் அமெரிக்காவிடமிருந்து பயிற்சியோ
பொருளாதார உதவியோ கிடைக்கவில்லை. சோவியத் யூனியனுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ் தான் போராளிகளுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான .எஸ்.ஐக்கும் இவை இரண்டும் பெருமளவில் கிடைத்ததாக கூறப்படுகிறது.
2.உஸாமா பெருமளவிலான சொத்துக்களுக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் சொந்தக்காரர்
1991-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானிற்கும், பின்னர் சூடானிற்கும் உஸாமா வெறுங்கையுடன் தான் சென்றார். உஸாமாவை லேடன் குடும்பத்தினர் கைவிட்டுவிட்டனர். கோடீஸ்வரரான தந்தையின் சொத்திலிருந்து சிறிய பங்கு கூட அவருக்கு கிடைக்கவில்லை.
3.1993-ஆம் ஆண்டு உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு காரணம் உஸாமா
ரம்ஸி யூசுஃப் தனியாக திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியது தான் 1993-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ரம்ஸி யூசுஃபுடன் பல தடவை ஒருங்கிணைந்து செயல்பட்ட காலித் ஷேக் முஹம்மது அல்காயிதாவுடன் இணைந்து செயல்படத் துவங்கியது 1996-ஆம் ஆண்டாகும். ஆனாலும், அப்பொழுதும் கூட உஸாமாவுடன் அவர் நெருங்கிப்பழகவில்லை.
4.போதைப்பொருள் சந்தை மூலமாக பணம் சம்பாதித்தார்
சாதாரணமாக போராளி இயக்கங்கள் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு கடைந்தெடுத்த பொய்யாகும்.
5.போராட்டங்களில் பங்கேற்றார்
ஆப்கானிஸ்தானில் சோவியத் ஜெனரலின் கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கினார் என உஸாமாவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. 1987-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பழங்குடியின பிரதேசமான ஜாஜியிலும், ஜலாலாபாத்திலும் நடந்த போராட்டங்களில் உஸாமா தீவிரமாக பங்கேற்றார் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
6.அதிக நேரத்தை குகையில் கழித்தார்
1990களின் இறுதியில் ஆப்கானிஸ்தானின் தோராபோரா மலைக்குன்றுகளின் குகையில் சில பத்திரிகையாளர்களை பேட்டியளிக்க அழைத்திருந்தார் உஸாமா. இச்சம்பவம்தான் இத்தகைய பிரச்சாரங்களுக்கு காரணமானது. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் போராளி ஒருவருக்கு சொந்தமான ஒரு பண்ணையில் உஸாமா வசித்திருந்தார்.
1999-இல் காந்தஹாருக்கு அருகில் சிறந்ததொரு காம்ப்ளக்ஸ் கட்டச்சென்றார். அப்போட்டாப்பத்தில் அத்தியாவசியமான வசதிகளைக் கொண்ட பெரிய கட்டிடத்தில் இறுதியாக அவர் வசித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இக்காலக்கட்டத்திற்கு இடையே அவர் பெரும்பாலும் குகையில் வாழ்ந்தார் என்ற செய்தி உறுதி செய்யப்படவில்லை.
7.இளைமைப்பருவத்தில் உஸாமா வாழ்க்கையை ஜாலியாக கழித்தார்
இளமை பருவத்திலேயே உஸாமா வெட்க உணர்வும், இறையச்சமுடைய நபராகவும் திகழ்ந்தார். ஆகையால், இந்த பருவத்தில் அவர் ஜாலியாக கழித்தார் என்ற செய்தியும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் சரியல்ல. மார்க்க ஆய்வுகளில் அதிக நேரத்தை செலவிட்ட இளம் பெண்ணை தான் உஸாமா திருமணம் செய்தார்.
8.சிறுநீரக நோயினால் உஸாமா மரணித்தார்
சிறுநீரக நோயினால் உஸாமா மரணித்தார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
9.கஷ்மீரில் தலைமறைவாக வாழ்ந்தார்
செச்னிய போராளிகளின் தலைவர், பிலிப்பைன்ஸிலும், இந்தோனேஷியாவிலும் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னணியில் செயல்பட்டார், 2004-இல் மாட்ரிட் குண்டு வெடிப்பிற்கு திட்டமிட்டார், பராகுவே மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இவருடைய நெட்வர்க் உள்ளதுஇவையெல்லாம் பல்வேறு அரசுகளும், அங்குள்ள உளவுத்துறைகளும் பரப்பும் அடிப்படையற்ற ஆதாரமற்ற செய்திகளாகும்.
10.உஸாமா கால்பந்து ரசிகனாக இருந்தார்
பிரிட்டன் கால்பந்து கிளப்பான ஆழ்ஸனலின் ரசிகர் தாம் உஸாமா என்ற செய்தி ஆதாரமற்றது. வடக்கு லண்டன் கிளப்பிற்கு அவர் ரசிகர் அல்லர்.

0 கருத்துகள்: