ஸன்ஆ:யெமன் வம்சா வழியை சார்ந்தவரும், அமெரிக்க குடிமகனுமான மார்க்க அறிஞர் அன்வர் அவ்லாக்கியை கொலை செய்ய அமெரிக்கா நடத்திய முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்க குடிமகனான அறிஞர் அன்வர் அவ்லாக்கியை அமெரிக்கா அல்காயிதா தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டி கொலைப்பட்டியலில் உட்படுத்தியுள்ளது.
யெமனில் தங்கியுள்ள அவ்லாக்கியை கொல்ல அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் தொடுத்த ஏவுகணை குறி தவறி வீழ்ந்தது. கடந்த வியாழக்கிழமை அல்காயிதாவை சார்ந்த அதிகாரிகளான முஸைத், அப்துல்லாஹ் முபாரக் ஆகியோர் யெமனில் கொல்லப்பட்டனர். இவர்கள் பயணித்த காரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக