தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.11

ரேமண்ட் டேவிசின் விடுதலை: அமெரிக்க கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்


இஸ்லாமாபாத், அமெரிக்க தூதரக பணியாளர் ரேமண்ட் டேவிஸ் விவகாரத்தில், அமெரிக்கா விடுத்த மற்றொரு கோரிக்கையையும் ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய ரேமண்ட் டேவிஸ், இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.,யின் உளவாளி என்றும் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. டேவிசுக்கு எதிரான மத அமைப்புகளின் ஆர்ப்பாட்டம், பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதுள்ள சிறையில் இருந்து அவரை, கவர்னர் மாளிகையில் பாதுகாப்பாக சிறை வைக்க வேண்டும் அங்கு தான் விசாரணையும் நடக்க வேண்டும் என அமெரிக்கா கோரியிருந்தது.
இக்கோரிக்கையை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு ஏற்க மறுத்து விட்டது. ஆனால், டேவிசுக்கு சாத்தியமான வரையில் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், "லாகூர் சிறை விதிகள் அனைத்தும் டேவிஸ் வழக்கிலும் கடைப்பிடிக்கப்படும். அதிக சலுகைகள், மக்கள் மத்தியில் மேலும் சீற்றத்தை கிளப்பி விடும். ஏற்கனவே டேவிசை தூக்கில் இட வலியுறுத்தும் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இந்த சலுகைகள் மேலும் போராட சாதகமாகி விடும்" என்று கூறினார்.
டேவிஸ் விவகாரத்தால், அமெரிக்க - பாகிஸ்தான் உறவு சிக்கலாகியுள்ள நிலையில் நேற்று முன்தினம், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் மார்க் கிராஸ்மன், பாகிஸ்தான் பிரதமர் சர்தாரி மற்றும் அதிபர் கிலானி இருவரையும் சந்தித்து பேசினார். டேவிஸ் விவகாரம் குறித்து கிராஸ்மனிடம் பேசிய சர்தாரி, "பாகிஸ்தான் அரசு பொறுப்புள்ள அரசு. தேசநலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அது செயல்படாது" என்று தெரிவித்தார்

0 கருத்துகள்: