தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.11

ஷாஹினா:முன் ஜாமீன் மனு பரிசீலிக்கும் தேதி மாற்றம்


பெங்களூர்,மார்ச்.8:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் கேரள மாநில பி.டி.பி. தலைவர் அப்துல் நாஸர் மஃதனி. இவருக்கெதிராக சாட்சியம் அளித்த நபர்களிடம் நேரடியாக பேட்டியெடுத்தக் காரணத்தினால் டெஹல்கா கேரள பெண் நிரூபர் ஷாஹினாவின் மீது கர்நாடகா போலீஸ் சாட்சிகளை மிரட்டியதாக வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ஷாஹினா கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மனுவைத்தாக்கல் செய்தார். நேற்று இம்மனு இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அரசுதரப்பு எதிர்வாதத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதால் மனுவை பரிசீலிப்பதை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஷாஹினாவின் முன் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் எடுத்தபொழுது அரசுதரப்பு இரண்டுவார அவகாசம் கோரியதைத் தொடர்ந்து மனுவின் மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

மடிக்கேரி செசன்ஸ் நீதிமன்றம் ஷாஹினாவின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஷாஹினாவுக்கு எதிராக ஸோமவால்பேட், சித்தாபுரா காவல் நிலையங்களில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 506-இன் படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: