தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.11

உ.பி.யில் முலாயம் சிங்கிற்கு வீட்டுக்காவல்


உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதிக்கு எதிராக முலாயம்சிங் அறிவித்த போராட்டத்தை அடுத்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
லக்னோ, மார்ச். 7- உத்திர பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, மாயாவதியின் போக்கு உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் இன்று முதல் 3 நாள் தொடர்
ஆர்ப்பாட்டம், மற்றும் பேரணி, மறியல் என போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விக்கிரமாதித்தியா மார்க் பகுதியில் உள்ள முலாயம்சிங் வீட்டை சுற்றிலும் போலீசார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டனர். இதனால் முலாயம் சிங் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்று வீட்டுக்காவலில் வைத்து போராட்டத்தை வலுவிழக்க செய்யும் மாயாவதி அரசின் நோக்கம் என முலாயம் குற்றம் சாட்டினார். இது குறித்து, இன்றைய லோக்சபா கூட்டத்தில் பங்கேற்க முடியாத அளவிற்கு நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன், இதனால் மாநில அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். சில மணி நேரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டதாக முலாயம் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது

0 கருத்துகள்: