தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

லிபியா மீது விமான தாக்குதலுக்கு இந்திய எம்.பி.க்கள் கண்டனம்


புதுடெல்லி, மார்ச். 23- லிபியா மீது, விமான தாக்குதல் நடத்தும் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு, கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அனைத்து கட்சி எம்.பி.,க்களும் லோக்சபாவில் நேற்று வலியுறுத்தினர்.
லோக்சபாவில் நேற்று, சமாஜ்வாடி உறுப்பினர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், லிபியா மீது, அமெரிக்க கூட்டுப் படைகள், விமான தாக்குதல் நடத்துகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை, வேடிக்கை பார்க்கக் கூடாது என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.பி., பாசுதேவ் ஆச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் பேசுகையில், கடாபியை பதவியில் இருந்து அகற்றுவதாகக் கூறி, அப்பாவி மக்களை குண்டுவீசி கொல்கின்றனர். ஈராக், ஆப்கனில் நடந்ததை போன்ற, மற்றொரு சம்பவத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். நாங்களும் கடாபிக்கு எதிரானவர்கள் தான். ஆனால், அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.
பா.ஜ., உறுப்பினர் யஷ்வந்த் சின்கா கூறுகையில், "லிபியாவில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ராணுவம் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம். லிபியா மீதான வான் வழி தாக்குதலை கண்டித்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், "லிபியா விவகாரத்தில், கூட்டுப் படைகளின் தலையீட்டுக்கு ஏற்கனவே அரசு கவலை தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில், மற்ற நாடுகள் தலையிடுவது சரியல்ல. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவது குறித்து, இரண்டு அல்லது மூன்று நாடுகள் சேர்ந்து, முடிவு எடுக்க முடியாது" என்றார்.

0 கருத்துகள்: