தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

லிபியா:அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.


திரிபோலி:கிழக்கு லிபியாவில் அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. எந்திரக் கோளாறு காரணமாக எஃப்-15 இ விமானம் நொறுங்கியதாகவும், விமானத்திலிருந்த இரண்டு பணியாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லிபியா எதிர்ப்பாளர்களின் வலுவான நகரமான பெங்காசிக்கு அருகே அமெரிக்க விமானம் நொறுங்கி
விழுந்துள்ளது. ஆனால், விமானம் நொறுங்கி விழுந்த இடம் என்பது குறித்து அமெரிக்க ராணுவம் தெளிவாக தெரிவிக்கவில்லை.
அதேவேளையில்,லிபியா ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது

0 கருத்துகள்: