தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

லிபிய ஊடகங்கள் டென்மார்க் மீது மோசமான குற்றச்சாட்டு !


டென்மார்க் 22.03.2011 செவ்வாய் மதியம்
லிபியா மீது தாக்குதல் நடாத்த புறப்பட்ட டேனிஸ் விமானங்கள் நேற்று முன்தினம் முதல் தாக்குதல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. டேனிஸ் விமானங்கள் தாக்கிய இலக்குகள் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று நேற்று டேனிஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை வெளியான லிபிய தொலைக்காட்சியின் ஆங்கில
சேவை கடாபியின் மாளிகை மீது தாக்குதல் நடாத்தியது டென்மார்க் விமானங்களே என்று தெரிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக முகமது கேலிச்சித்திர ஓவியங்களை வெளியிட்டு இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் இந்த நாடு இப்போது கடாபியின் மாளிகைளை தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தது. கடந்த இரண்டு நாட்களில் நான்கு பெரிய தாக்குதல்களை டேனிஸ் விமானங்கள் நிகழ்த்தியுள்ளன. அதேவேளை தற்போது போரில் ஈடுபட்டுள்ள டேனிஸ் விமானங்கள் எப் – 16 வகையை சேர்ந்தவை என்றாலும் அவை 30 வருடங்கள் பழமையானவை என்று டேனிஸ் படைத்துறை மேயர் கொன்றிக் றோபி டாம் தெரிவித்தார். டென்மார்க் பாராளுமன்றம் வரும் 2015ல்தான் புதிய விமானங்களை வேண்ட இருக்கிறது. ஆனால் இப்போது கடும் ஆபத்தான பணியில் 30 வருட பழைய விமானங்களுடன் டேனிஸ் விமானிகள் களமிறங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: