தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

மன்மோகன்சிங் பொதுமக்களை திசை திருப்புகிறார் – ஜூலியன் அஸாஞ்ச்


புதுடெல்லி:பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்திய தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் பொதுமக்களை திசை திருப்புகிறார்கள் என விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்
தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்திய பாராளுமன்றம் அல்லோல கல்லோலப்படுகிறது.

இச்சூழலில் அஸாஞ்சேவின் பேட்டி வெளியாகியுள்ளது. என்.டி.டிவிக்கு பேட்டியளித்த அஸாஞ்சே இந்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்க அரசிற்கு தவறான தகவலை அளித்துவிட்டார் எனக்கூறி தங்களது குற்றத்தை அமெரிக்க தூதர் மீது சுமத்த இவர்கள் முயல்கின்றார்கள். அது சரியல்ல. லஞ்ச விவகாரம் தொடர்பாக இந்திய தலைவர்களைக் குறித்த நம்பிக்கையான உண்மையான அறிக்கையைத்தான் அமெரிக்க தூதர் வாஷிங்டனுக்கு அனுப்பினார் என அஸாஞ்சே தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: