தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.11

பாகிஸ்தான்:சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்,மார்ச்.3:பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டி (வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த ஷஹ்பாஸை கொலைச் செய்தது பாக். தாலிபான் என போலீஸார் கூறுகின்றனர்.

தனது தாயாரின் வீட்டிலிருந்து காலையில் காரில் வெளியேறிய ஷஹ்பாஸை மூன்று அல்லது நான்குபேர் அடங்கிய கும்பல் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருடைய கார் டிரைவர் மீது அந்தக் கும்பல்

தாக்குதல் நடத்தவில்லை. அமைச்சரின் உடலில் எட்டுக் குண்டுகள் துளைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடைபெறும் பொழுது பாதுகாப்பு படையினரும் அவருடன் செல்லவில்லை. பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ உறுப்பினரான ஷஹ்பாஸ் மத அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய உயிருக்கு மிரட்டல் விடுக்கபட்டதாக போலீஸ் கூறுகிறது.

தாக்குதலின் பொறுப்பை தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாக பி.பி.சி கூறுகிறது.

நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் ஷஹ்பாஸ் என பாக்.தாலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் அஹ்ஸாமுல்லாஹ் அஹ்ஸான் பி.பி.சி உருது சேவையிடம் தெரிவித்துள்ளார். நபிகளாரை அவமதிப்பவர்களை தண்டிக்கும் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை பேசுபவர்களுக்கெதிராக தண்டனை நடவடிக்கை தொடரும் என அஹ்ஸான் தெரிவித்துள்ளார்.

மத அவமதிப்பு சட்டத்தை எதிர்த்ததால் கொலைச் செய்யப்படும் பி.பி.பி கட்சியின் இரண்டாவது மூத்த தலைவர் ஷஹ்பாஸ் ஆவார். கடந்த ஜனவரி 4-ஆம் தேதி பஞ்சாப் கவர்னர் தஸீர் அவருடைய மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மத அவமதிப்புக்கு எதிரான சட்டத்தை எதிர்த்ததால் ஷஹ்பாஸை கொலைச் செய்ததாக தாக்குதல் நடத்தியவர்கள் பிரசுரத்தை
விநியோகித்தனர்.

ஷஹ்பாஸை உடனடியாக ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில் அனுமதித்த பொழுதும் காப்பாற்ற இயலவில்லை. அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும் கொலைச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கிலானி உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: