தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.11

எகிப்து அரச பயங்கரவாதத்தின் ஆதாரங்கள் அழிக்கபடுகின்றது ?


எகிப்து பல நாச வேலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்தாதாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முபாரக்அரசு உருவாக்கிய தேசிய இரகசியப் போலீஸ் படையை கலைக்குமாறு கோரும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது முபாரக் வெளியேற்ற பட்டதும் இராணுவ நிர்வாகத்திடம் இஹ்வானுல் முஸ்லிமீன், உட்பட மற்றும் அமைப்புகள் , ஏனைய எதிர் கட்சி அமைப்புகள் அனைத்தும் தேசிய போலீஸ் படையையின்  இரகசியப்
போலீஸ் பிரிவை கலைக்குமாறு கோரிவருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய இரகசியப் போலீஸ் படை தலைமையகத்தில் வைக்கபட்டுள்ள முக்கிய இரகசிய ஆவணங்களை அதன் அதிகாரிகள் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக் தெரிவித்த எகிப்திய மக்கள் தேசிய இரகசியப் போலீஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்து அலுவலகத்தினுள் நுழைந்தனர் இதன் போது இரகசியப் பொலிஸ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யதுள்ளது தொடர்ந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் தேசிய இரகசியப் போலீஸ் படையை கலைக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் விரிவாக
ஹுஸ்னி முபாரக் அரசு எகிப்தின் இராணுவ பலத்தை வலுவிழக்க செய்து ஆரம்பத்தில் அதன் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்ற எண்ணிகையை நான்கு இலட்சமாக குறைத்து எகிப்தின் தேசிய போலீஸ் படையை எண்ணிகையில் 1.2 மில்லியன் என்ற எண்ணிக்கைக்கு உயர்த்தியதுடன் அதன் கரங்களில் அதிகூடிய அதிகாரம் ஒப்படைக்கப்படிருந்தது உள்ளநாட்டு அமைச்சின் கீழ் இயங்கிய இந்த தேசிய போலீஸ் படை மிகவும் பலமான இரகசியப் பொலிஸ் பிரிவை கொண்டிருந்தது இதில் ஒரு இலட்சத்தி 50 பேர் கடமையில் உள்ளனர் இந்த பிரிவு எகிப்தின் முழுமையான மனித உரிமை மீறல்களுக்கும் பெறுப்பை ஏற்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் கூறிவருகின்றனர்.
இதேவேளை முபாரக் அரசியின் இறுதி மாதங்களில் எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு அருகில் புதுவருட பிரார்த்தனைகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 21 பேர் கொல்லப்பட்னர் இந்த குண்டு தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்ததாக முபாரக் அரசு தெரிவித்தது குறிப்பாக உள்ளநாட்டு அமைச்சர் தெரிவித்தார் பின்னர் அந்த குண்டு தாக்குதலை அப்போதைய உள்ளநாட்டு அமைச்சர் ஹபீப் அல் அட்லி திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சட்டப் பட்டு தடுத்து வைக்கபட்டுள்ள நிலையில் அவரின் அமைச்சின் கீழ் இயங்கிய இரகசிய போலீஸ் பிரிவின் ஆவண காப்பாக பகுதி தீமுட்ட பட்டுள்ளது இதில் அலெக்ஸாண்டிரியா கிறிஸ்தவ தேவாலய குண்டுவெடிப்புடன் தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்படுள்ளதாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: