ஹமாஸ் எகிப்தின் புதிய வெளிநாட்டு அமைச்சரின் நிலைபாட்டை பாராட்டியுள்ளது பலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான போராளிகள் அமைப்பானஹாமாஸ் எகிப்தில் இடைக்கால இராணுவ நிர்வாகத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி காஸா மீதான இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று கோரியிருந்த நிலைபாட்டை பாராடியுள்ளதுடன் அவரின் பலஸ்தீன் தொடர்பான நிலைபாடுகள் அவரின் இந்த
பதவிகாலத்தில் நடவடிக்கைகளாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளதுஇது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாங்கள் எகிப்து புதிய வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபியின் காஸா மீதான முற்றுகை தொடர்பாக அவரின் நிலைப்பாடுகளை மற்றும் அதன் நீதியற்ற கொள்கைகளை அவர் நிராகரித்துள்ளமையையும் பாராட்டுகின்றோம் ஆதேபோன்று அவரின் நிலைப்பாடான கேம் டேவிட் -Camp David Accords- உடன்படிக்கை விரிவாகசிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் பாராட்டுகின்றோம் என்றும் இவரின் இந்த நிலைப்பாடுகள் அவரின் புதிய பதவிகாலத்தில் வெளிப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது இந்த ததகவலை பலஸ்தீன தகவல் மையம் இன்று தெரிவித்துள்ளது
தற்போது வெளிநாடு அமைச்சராக நியமனம் பெற்றுள்ள நபீல் அல் அரபி தனது புதிய பதவியை பெற்றுக்கொள்ள முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அல் ஷுரூக் என்ற எகிப்திய அரபு பத்திரிகைக்கு எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் எகிப்தின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் அபூல் -ஹீத் காலத்தில் எகிப்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் காஸா மீதான முற்றுகையையும் கடுமையாக சாடியிருந்தார் என்று பலஸ்தீன தகவல் மையம் தெரிவிக்கின்றது
இவர் எழுதிய கட்டுரைக்கு பின்னர் இவர் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பலரின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது எகிப்தில் ஆரம்பத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற அமைப்புகளின் ஆதரவை பெற்றிருந்த எகிப்தின் இரண்டாவது ஜனாதிபதி கமால் அப்துல் நசார் அந்த அமைப்பின் பல சதாப்த கால பின்னடைவுக்கு காரணமாக மாறினார் என்பது வரலாறு இதேவேளை 8 ஆண்டுகள் மொசாடின் தலைவராக இருந்து இந்த வருட ஆரம்பத்தில் ஓய்வு பெற்ற தலைவரான மெய்ர் டொகான் Meir Dagan- இஸ்ரேல் அரபு முஸ்லிம் உலகின் செல்வாக்கு பெற்றிருக்கும் டாக்டர் யூசுப் அல் கர்ழாவிவயுடன் பேசவேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கேட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக