டோக்கியோ, ஜப்பான் சுனாமி தாக்குதலால் அங்குள்ள புகுசிமா அணு உலைகள் செயல் இழந்தன. இங்கு மொத்தம் 6 அணு உலைகள் உள்ளன. அதில் 4 அணு உலைகள் பாதிப்பு அடைந்து வெடித்தன. அதில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. அணு உலைகளை குளிர்விக்கும் கருவிகள் பழுதானதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்கமுயற்சித்து வருகின்றனர். இதற்காக தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்து வருகின்றனர். இது போதாது என்பதால் ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ரை ஊற்றி குளிர்விக்கும் முயற்சி நடக்கிறது.
இதற்காக சி.எச். 47 சினூக் வகை ராணுவ ஹெலிகாப்டர்கள் பலப்படுத்தப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் ராட்சத தொட்டி மூலம் கடல் தண்ர் எடுத்து வந்து அணு உலைகள் மீது ஊற்றின. ஒவ்வொரு தடவை 7 1/2 டன் எடை கொண்ட தண்ணீர் ஊற்றப்பட்டது.
அதே நேரத்தில் குளிர்விக்கும் கருவியை மீண்டும் இயக்க வைக்க தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை எட்டியுள்ளது. ஆனாலும் இந்த கதிர்வீச்சின் அளவு குறைவாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்க
இதற்காக சி.எச். 47 சினூக் வகை ராணுவ ஹெலிகாப்டர்கள் பலப்படுத்தப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் ராட்சத தொட்டி மூலம் கடல் தண்ர் எடுத்து வந்து அணு உலைகள் மீது ஊற்றின. ஒவ்வொரு தடவை 7 1/2 டன் எடை கொண்ட தண்ணீர் ஊற்றப்பட்டது.
அதே நேரத்தில் குளிர்விக்கும் கருவியை மீண்டும் இயக்க வைக்க தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை எட்டியுள்ளது. ஆனாலும் இந்த கதிர்வீச்சின் அளவு குறைவாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக