டெக்ரான், ஈரான் நாடு முதல் முறையாக விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்பியது. அதில் மிருகத்தை அனுப்புவதற்கான ஒரு கூண்டையும் ராக்கெட்டு சுமந்து சென்றது. ராக்கெட்டில் அனுப்பப்பட்டு உள்ள கூண்டில் மிருகம் ஏதும் இல்லை.
இந்த கூண்டை கடந்த 7-ந் தேதி நடந்த விழாவில் அதிபர் அகமதினிஜாத் வெளியிட்டார். மிருகத்தை ஏற்றி
செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. கவோஷ்கர்-4 என்ற ராக்கெட் கடந்த 15-ந் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ஈரானிய விண்வெளி கழகம் 2009-ம் ஆண்டு ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி பூமியை சுற்றி வரும்படி செய்தது. கடந்த ஆண்டு அது சிறிய மிருகங்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்தது. அறிவியல் சோதனை என்ற பெயரில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தலாம் என்று மேற்கத்திய நாடுகள் தங்கள் கவலையை வெளியிட்டு உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக