சாதிக் பாட்சா தற்கொலைபற்றி அவசர கதியில் பேட்டி அளிப்போரே! கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியார்கள் வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? சென்னையில் இருந்த தொழிலதிபர் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை வருமுன்னரே,
அவசரம் அவசரமாக உடனே சில ஊடகங்கள், தொலைக்காட்சிகளில், துக்ளக் சோ இராமசாமியிடமும்,
சுப்பிரமணியசாமியிடமும் கருத்துக் கேட்டு, இது கொலைதான், தற்கொலை அல்ல என்றும், சில மணித் துளிகளிலேயே கூறியதை ஒளி, ஒலி பரப்புச் செய்தனர். ஜெயலலிதாவும் வழக்கமான அறிக்கையில் இதே கருத்தைக் கூறுவது தேர்தல் அரசியலில் இதைத் தீனியாகப் பயன்படுத்தவேண்டுமென்று கருதித்தானே? தி.மு.க. இதனை சி.பி.அய். விசாரணைக்கே விட்டுவிட்டது!
இதில் இவ்வளவு அவசரம் காட்டிய இந்தப் பூணூல்கள் கூட்டம், காஞ்சியில் சங்கரராமன், வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப்பகலில் பதறப் பதற வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல், இரண்டாவது குற்றவாளியாகி, சிறையில் இருந்த 1 ஆவது, 2 ஆவது சங்கராச்சாரியார்களுக்காக எப்படியெல்லாம் பதறினார்கள்? அலறி ஆளுநரைப் பார்த்தனர்.
டில்லியில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமய்யர் உட்பட பதறிக் கதறினர்; உண்ணாவிரதம் இருந்தனர். இப்போது அதிகமான சாட்சிகளைக் கலைத்து, வழக்கினை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட, சட்டத்தை வளைக்கப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றனவே, அதுபற்றி மூச்சுவிட்டது உண்டா? இது அப்பட்டமான மனுதர்மம் அல்லாது வேறு என்னவாம்?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக