தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.11

யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 30 பேர் மரணம்


ஸன்ஆ:யெமன் தலைநகரான ஸன்ஆவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் மரணித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு ஒன்றுதிரண்ட எதிர்ப்பாளர்களின் ஒரு குழுவினர் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பி.பி.சி தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. கட்டிடங்களின் முகட்டுப் பகுதியில் நின்றிருந்த ராணுவத்தினர் கீழே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
துனீசியா-எகிப்து மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அரசு எதிர்ப்புப் போராட்டம் சூறாவளியாக யெமனில் வீசி வருகிறது. 32 ஆண்டுகளாக பதவியில் தொடரும் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகவேண்டும், ஊழலை ஒழிக்கவேண்டும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி யெமனில் ஏதன், தாயிஸ் நகரங்களில் பெருந்திரள் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எ.ஃப்.பி தெரிவிக்கிறது

0 கருத்துகள்: