தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.12

இந்திய மாடல்களின் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை?


இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ் தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்க ப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை ம றைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
இப்பரிந்துரையை அமைச்சர் கமர் சமான்கெய்ரா அறிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே வரும் விளம்பர மாடல்கள் அரைகுறை ஆடைகளுடன் வலம்வருவதை ஏற்க முடியாது எனவும், பாலிவூட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப், கிரீம் விளம்பரமொன்றுக்கு ஆபாச உடை அணிந்திருப்பதை குடும்பத்தினருடன் பார்க்க முடியாது எனவும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்: