தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.12

உலகை மதிக்காத இஸ்ரேலின் நாசகார போக்கு


பாஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்கா ணிப்பாளர் தரத்திலான அந்தஸ்த்து வழங்கப்பட்டது ம் இஸ்ரேல் நிலை தடுமாறி தப்பான பாதையில் அ டியெடுத்து வைத்துள்ளது.கிழக்கு ஜெருசெலேத்திலு ம், காஸா பகுதியிலும் உடனடியாக 3000 குடியிருப்பு க்களை ஆக்கிரமிப்பாக நிறுவும் பணிகளை ஆரம்பித் துள்ளது.ஏற்கெனவே ஐ.நா சபையில் இயற்றப்பட்ட தீர்மான இலக்கம் 15ன் பிரகாரம் பாலஸ்தீன வட்ட கைக்குள்
இஸ்ரேல் அத்துமீறிய குடியிருப்புக்களை அமைக்க இயலாது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.அதையெல்லாம் மீறி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்த 138 நாடுகளுடைய கருத்துக்களையும் மதிக்காது இஸ்ரேல் நாசகார பாதையில் சென்றுள்ளது.
பாலஸ்தீனம் பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத யூதர்களின் பொறாமையை அந்தச் செயல் காட்டியது.
இஸ்ரேலின் இந்தச் செயல் தப்பானது, வருங்காலத்தில் இடம் பெற வேண்டிய அமைதிப் பேச்சுக்களுக்கு பெரும் பங்கமும் ஊறும் விளைவிக்கும் செயல் என்று இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவே சில மணி நேரங்களுக்கு முன் எச்சரித்துள்ளது.
அத்துமீறிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதி;யை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகு கொடுத்தவுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொமி வியோற்றர் இஸ்ரேலுக்கான எச்சரிக்கையை விடுத்தார்.
அதேவேளை ஐ.நாவில் தீர்மானம் நிறைவேறிய பின்னர் பாலஸ்தீனம் ஒரு நாடா இல்லை அங்கு இரண்டு ஸ்ரேற்களை உருவாக்குவதா என்ற பேச்சுக்களை ஆரம்பிக்க விடாமலே இஸ்ரேல் இந்தச் செயலில் இறங்கியுள்ளது.
மறுபுறம் பாலஸ்தீன பிரதமர் முகமட் அபாஸ் உடனடியாக இந்த முயற்சிகளை கைவிடும்படி இஸ்ரேலை வலியுறுத்தினார்.
ஆயிரம் தடவைகளுக்கு மேலாக பேச்சுக்களுக்கு தயார் என்று தெரிவித்த பின்னரும் கூட நில ஆக்கிரமிப்பில் இறங்கியுள்ளது இஸ்ரேல் என்று கூறிய அவர் அமைத்த வீடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை காஸா – றமலா என்று இரண்டாகப் பிரித்து பலம் குன்றிய ஆட்சி வட்டகையாக மாற்றுவது.
அங்கு இயன்றளவு நில ஆக்கிரமிப்பை செய்து பிரதேசங்களை ஊடறுத்து துண்டாடி நில ரீதியாக ஓர் அரசை அமைத்தாலும் அதை பயனற்ற அரசாக செய்வது போன்ற உத்திகளை இஸ்ரேல் அரங்கேற்றியுள்ளது.

0 கருத்துகள்: