தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.12

ஹைதராபாத் சார்மினார் அருகே கோயில் கட்ட எதிர்ப்பு கலவரம்


பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கோயில் விஸ்தரிப்பு விவகாரத்தில் வெள்ளியன்று கலவரம் ஏற்பட்டது. . கலவரத்தின் காரணமாக ஏழு நபர்கள் காயமுற்றனர். வாகனங்கள் சிலவும் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.சார்மினாருக்குச் செல்லும் வழிகளை காவல்துறை அடைத்ததையடுத்து மிகவும் மும்முரமான வணிகக் கேந்திரமான சார்மினார் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் காவல்படைகள் அப்பகுதிகளில் பணிசெய்யப் பணிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் காவல் அணிகள் அனுப்பப் படுமென்றும் அவர் தெரிவித்தார்.
400 வருடம் பழமையான சார்மினாரின் அழகைக் கெடுக்கும் வகையில் அதை ஒட்டியுள்ள பாக்யலட்சுமி கோயிலை மாநில அரசு விஸ்தரிப்பதை அப்பகுதி மக்கள் ஆட்சேபிப்பதை அடுத்து இந்த விவகாரம் பற்றியுள்ளது.
ஹைதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுல்தான் அஸதுத்தீன் உவைஸி "காவல்துறை அத்துமீறிவருகிறது. மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட  அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்

செய்தி நன்றி: இன்நேரம்.காம்

0 கருத்துகள்: