தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.12

பாலஸ்தீன் மீது கடும் தாக்குதல் நடத்த 30.000 படைகளுடன் இஸ்ரேல் தயாராகிறது


காஸா வட்டகைக்குள் மறுபடியும் ஒரு போரை ஆரம்பிக்க இஸ்ரேலியப் படைகள் எத்தனித்து சுமார் 2000 படைகள் எல்லையை நெருங்கிவிட் டன.இதே நேரம் உடனடியாக 30.000 போர் வீரர் களை போர் என்னதத்துடன் களமிறங்க அழைத் துள்ளது இஸ்ரேல்.கடந்த 24 மணி நேரத்தில் ம ட்டும் இரும்பு தண்டனை என்ற கொலைப் பெய ர் கொண்ட இஸ்ரேலிய ஏவுகணைகள் 28 பால ஸ்தீனப் பகுதிக்குள் ஏவப்பட்டுள்ளன.இந்த ஏவு கணைகள் மிகவும் நவீனமானவை, இடை நிறு த்தாமலே ஏவுகணைகளை
பொழியும் ஆற்றல் மிக்கது, எதிர்வரும் 2014 லேயே போர்க்களம் வரும் என்று கணிக்கப்பட்ட இக் கருவி இப்போது காஸாவில் பரிசீலிக்கப்படுகிறது.
வெற்றி கொள்ள இலகுவான இலக்கை தாக்கி பயிற்சி எடுக்கும் இஸ்ரேல் அதைத் தொடர்ந்து ஈரானுடனான இன்னொரு போருக்காக தன்னை தூசு தட்ட ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த எகிப்து தனது நாட்டு பிரதமர் கிஸ்காம் கன்டீலை உடனடியாக பாலஸ்தீனம் அனுப்பியது.அதைத் தொடர்ந்து குறுகிய யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது, தாக்குதலில் கொல்லப்பட்ட 11 பாலஸ்தீனக் குடும்பங்களுக்கும் இவர் ஆறுதல் தெரிவித்து, ஹமாஸ் தலைவர்களுடன் பேச்சுக்களை நடாத்தினார்.
இஸ்ரேலின் செயல் கண்டனத்திற்குரியது அது ஓர் ஆக்கிரமிப்புச் செயல் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவரை இழந்துள்ள போராளிகள் பெரும் கொதிப்புடன் காணப்பட்டார்கள், எகிப்திய பிரதமரின் நிபந்தனைகளை தூக்கிக் குப்பையில் வீசினார்கள்.
எகிப்திய பிரதமர் பேசிக் கொண்டிருக்கவே இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதில் இரண்டு பாலஸ்தீன சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள்.
எகிப்திய பிரதமர் நிற்கும்போதே ஹமாஸ் மோட்டார் தாக்குதலை நடாத்தியதாகவும் அவர்கள் எகிப்திய பிரதமரை கடுகளவும் மதிக்கவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகு தெரிவித்தார்.
குறுகிய நேரத்தில் சமாதானம் முறிவடைந்தது, யுத்த நிறுத்தம் என்ற செய்தி சூடாற முன்னரே இஸ்ரேலிய இரண்டாவது பெரிய நகர் டெல் அவிவ்விற்கு 15 கி.மீ தெற்கே ஹமாஸ் ஏவிய மூன்று மோட்டார் செல்கள் தரையிறங்கின.
கடந்த 1991 வளைகுடா போரின்போது இஸ்ரேலை நோக்கி சதாம் உசேன் ஏவிய ஏவுகணைக்குப் பிறகு சுமார் 21 ஆண்டுகால இடைவெளியில் மறுபடியும் இஸ்ரேல் தலைநகரை ஷெல் தாக்கியிருக்கிறது.
காஸா வட்டகை இடிபாடுகளும் புகைக் காண்டமுமாகக் காட்சியளிக்கிறது, அடுத்த கட்டம் போர் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை 1800 மோட்டார் தாக்குதல்கள் இஸ்ரேலை தீண்டும்படியாக குறுங்காலத்தில் செய்யப்பட்டதாக இஸ்ரேல் செய்திகள் கூறுகின்றன.
சற்று முன் ஹமாஸ் ஏவிய நீண்ட தூர ஏவுகணை ரெல்அவிவ்வில் மீண்டும் விழுந்துள்ளது, யுத்த நிறுத்த காலத்தில் இரு தரப்பும் போருக்கு தயாராகியிருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்: