தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.12

கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்


சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வத ற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிரு ந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்க ள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது. கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடி வாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இன ங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.கொ சோவா
தனிநாடாக பிரிந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைற் கல் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
சரியான பாதையில் சென்று கொசோவா தனது இலக்கை எட்டித் தொட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றும் பராக் ஒபாமா தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.
தற்போது தனிநாடாக மலர்வதற்குரிய இறுதி நிலையில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் நிற்கிறது, கொசோவாவின் இந்த வெற்றி பாலஸ்தீனத்திலும் புதிய மலர்ச்சியை ஏற்படுத்தும்.
அதேவேளை இலங்கையில் தமிழருக்கான சுயாட்சியை ஏற்படுத்த முடியாத சூழல் இருக்கிறது, இந்தியா – சீனா இரு நாடுகளும் பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.
மேலும் கிழக்கு மகாண தேர்தல் போன்ற அற்ப தேர்தல்களில் கூட்டமைப்பு காட்டி வரும் ஆர்வம் வெளிப்புற தோற்றத்தில் சரி போல தெரிந்தாலும், இலங்கைத் தமிழருக்கு கொசோவா போல இறைமையுள்ள தீர்வு கிடைக்காமல் போவதற்கான ஆபத்தையும் உள்ளடக்கியிருப்பதை மறுக்க முடியாது.

0 கருத்துகள்: