தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.12

தீவுகளை வாங்கியது ஜப்பான் : போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா


கிழக்கு சீன பெருங்கடலில் அமைந்துள்ள சர்ச்சை க்குரிய மூன்று தீவுகளை சொந்தம் கொண்டாடுவதி ல் சீனா - ஜப்பான் இடையே பதற்றநிலைமை அதிக ரித்துள்ளது.ஜப்பானின் தனியாருக்கு சொந்தமான இத்தீவுகளை அரசே விலைக்கு வாங்கலாம் என ஜப் பான் முடிவு செய்து ஒப்பந்தத்தை முடித்தது. ஆனா ல் இது சட்டவிரோதமானது. இந்த கொடுக்கல் வாங் கல் செல்லுபடியாகாது. ஜப்பான் இத்தீவுகளை திருட பார்க்கிறது. சீனாவுக்கே இத்தீவு சொந்தமானது என சீன அரசு அதிரடியாக அறிவித்தது.
தாய்வானும் இத்தீவுக்கு முன்னர் சொந்தம் கொண்டாடியிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற சீன ஜனாதிபதி ஹூ ஜிண்ட்டாவோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹகோ நோடா ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஜப்பான் தனது தீர்மானத்தை அறிவித்ததை தொடர்ந்து சீன அரசு இரு ரோந்துக்கப்பல்களை அத்தீவுக்கு அருகில் அனுப்பி வைத்துள்ளது.  அக்கப்பல்களும் குறித்த தீவுகளுக்கு அருகில் உள்ள கடல்பரப்பில் தற்போது நிலைகொண்டுள்ளதாகவும், நாட்டின் இறையாண்மையை உறுதிசெய்துகொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனை ஜப்பான் கடற்படை கண்காணித்து வருவதாக ஜப்பானும் அறிவித்துள்ளது.

உண்மையில் அத்தீவுகளில் மனிதக்குடியேற்றம் எதுவும் இடம்பெறாத போதும் ஆராய்ச்சி அடிப்படையில் அது மிக உயர்ந்த வளம் உடைய தீவாக கருதப்படுகிறது. இம்மூன்று தீவுகளையும் கொள்வனவு செய்ததில் ஜப்பான் 26 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 16.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளது.

0 கருத்துகள்: