தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.12

தமிழக முதல்வரின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு


தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'பயங்கரவாத தந்திரோ பாயங்களை' பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக, சமு க ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள் ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை ஆ ரம்பித்த கூடங்குளம் பகுதி மக்கள் அங்கு தமது எதிர்ப் பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில்
இம்மக்க ளுக்கு ஆதரவாகநேற்றிரவு இடிந்தகரை வந்தடைந்தார் சமூக ஆர்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

அங்கு நடைபெறும் வன்முறைகள் தொடர்பில் இன்று காலை இடிந்த கரையிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழக காவல்துறையும், தமிழக முதல்வரும் பயங்கரவாத போர் தந்திரோபாயங்களை பயன்படுத்தி இப்போராட்டத்தை ஒடுக்க பார்க்கிறார்கள். இடிந்த கரையில் உள்ள கிரிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து காவல்துறை பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருக்கிறார்கள். மேடையில் மலம் கழித்துள்ளார்கள். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள், படகுகள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர். மக்கள் சொத்துக்களை சேதப்படுத்த எந்த நாட்டு சட்டம் காவல்துறைக்கு அனுமதி அளித்திருக்கிறது.  தனக்காக வாக்களித்த மக்களுக்காக ஜெயலலிதா செய்யும் நன்றிக்கடன் இது தானா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 'சேததுரோக குற்றச்சாட்டு, கொலை முயற்சி என்பவற்றின் கீழ் சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து இங்குள்ள கிராமத்தவர்களை பௌதீக ரீதியாகவும் அச்சுறுத்துகிறது காவல்துறை. ஆயுதமின்றி போராடும் எவரும் உங்களுக்கு சேசத்துரோகிகள் தான். மும்பையில் சிறையில் வாடும் கார்டூனிஸ்ட் திரிவேதியும் இதற்கு விதிவிலக்கல்ல' என தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையினரிடம் சரணடைய சென்ற உதயகுமாரை தாமே தடுத்து நிறுத்தியதாகவும், பிணை தொடர்பான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள கேஜ்ரிவால், உதயகுமார் சிறைக்கு வெளியில் இருந்தால் தான் இப்போராட்டட்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என கூறியுள்ளார்.  

0 கருத்துகள்: