தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் – ஐ.நா. செயலாளர் கண்டனம்

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்பட த்திற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பான்-கி-மூன் மேலும் கூறு கையில், ‘லிபியா, எகிப்து, ஏமன், மத்திய கிழக்கு பகுதிகளில் நடந்த போராட்டங்களும், தாக்குதல்களும் நியாயமற்றது. இந் த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட் டினார்.ஐ.நா. பாதுகாப்பு சபையும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை
தெரிவித்துள்ளது. 15 நாடுக ளின் பிரதிநிதிகளும்
போராட்டம் நியாயமற்றது என்று கூறியுள்ளன ர்.இதற்கி டையே ஐ.நா. உயர் பிரதிநிதி ஜார்ஜ் காம்பியோ, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: