தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

இஸ்லாத்தை கேலி செய்த அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம்


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத்தில்  கடந்த 15-9-2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு

செய்தனர்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.
பெண்கள் துடப்பகட்டை, செருப்பு, சானி கரைசல் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் கொந்தளிப்பில் குழுமி இருந்தாலும் எந்த வித சிறிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பை வெளிப்படுத்தி காவல்துறையினரை ஆச்சிரியத்தில் ஆழ்தியது.
.
ஒபாமா, ஹிலாரி , பாதிரியார் ஆகியோரின் உருவப்படங்களை முஸ்லிம்கள்  கிழித்து எரிந்தனர்.  மேலும் செருப்பால் அடித்து சானியை தெளித்து ,காரி உமிழ்நதனர்.இதுபோல் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல் லிபியாவில் போராட்டம் நடத்தி கொண்டுஇருக்கும்போது அமெரிக்கதூதரை பத்திரமாக லிபியபோலீசார் அழைத்துக்கொண்டு செல்ல முற்படும்போது மர்ம நபர்கள் ராக்கெட் லாஞ்சர்மூலம் தாக்குதல் நடத்தியதில் தூதர் உட்பட 4பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர், துனீசியாவில் உள்ள அமெரிக்கதூதரகம் தாக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது, எகிப்திலும் அடித்துநொருக்கப்பட்டுள்ளது.


Photo TNTJrahmathnagar

0 கருத்துகள்: