தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக தொடரும் உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் : இதுவரை 12 பேர் பலி


இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம் எனக்கு ற்றம் சுமத்தப்படும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதி ராக மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை நடைபெற் ற ஆர்ப்பாட்டங்களில் இரு அமெரிக்க இராணுவ வீர ர்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.அமெரிக்க தி ரைப்படத்திற்கு எதிராக, கடந்த செப்.11 ம் திகதி லிபி யாவின் பெங்காஸி நகரில் உள்ள அமெரிக்க தூதர கம் மீது நடத்தப்பட்ட தாக்கு
தலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் கிரிஸ் ஸ்டீவன் உட்பட 4 அமெரிக்கர்கள் பலியாகினர்.

அன்றைய தினம் எகிப்தின் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த அமெரிக்க கொடிக்கு பதில் கறுப்பு இஸ்லாமிய கொடி பறக்கவிடப்பட்டது. செப்.13ம் திகதி யேமனில் சானா நகரில் உள்ள அமெரிக்க தூதரக மதில் சுவர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நேற்று செப்.14ம் திகதி சூடானின் கார்டோவுமில் உள்ள அமெரிக்க, ஜேர்மனிய, இங்கிலாந்து தூதரகங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் காவல்துறையினருடன் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் பலியாகினர்.

லெபனனானில் அமெரிக்க KFC உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். துனிஸியாவில் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மீண்டும் நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நேடோவின் பாஸ்டியன் முகாம் மீது இன்று தலிபான்கள் திடீரென அதிரடியாக நட்சத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியாகினர். பிரித்தானிய இளவரசர் ஹரி தற்சமயம் ஹெலிகாப்டர் பயிற்சிக்காக ஆப்கானிஸ்தானில் குறித்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளார். இன்றைய தாக்குதல்களில் அவருடைய முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் பிரித்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்திற்கு பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதலை முன்னெடுத்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் அமெரிக்க தூதகங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகம்மது நபி மற்றும் இஸ்லாத்தை அவமதித்து காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாக கூறப்படும் Innocense of Muslims எனும் அமெரிக்க திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் செப்.11ம் திகதி வெளியாகின. அதை தொடர்ந்து மாற்றுப்பெயர் ஒன்றில் யூடியூப்பில் அத்திரைப்படமும் வெளியானது. 

0 கருத்துகள்: