தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.12

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மீண்டும் சர்ச்சையில்


ந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமது பதவி காலத்தில் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களையெல்லாம் தன்னுடனேயே வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரதிபா பாட்டீல் கட்ந்த ஐந்தாண்டு காலம் இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தபோதுநாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும்உலக நாடுகள் பலவற்றிற்கும்
அரசு முறை பயணமாக சென்றார்.அப்போது அவருக்கு பல நாட்டு அரசுகளும்,சந்திக்கும் முக்கிய பிரமுகர்களும், மாநிலங்களில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலு
ம் விலை மதிப்புடைய பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டன.

இவ்வாறு பிரதிபா தனது பதவி காலத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பலரிடமிருந்தும் ஏராளமான விலை மதிப்புடைய பரிசு பொருட்களை பெற்றார்.
வழக்கமாக ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் பரிசு பொருட்கள் அரசுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் சொந்தமானது என்பதால்,அவற்றை ஜனாதிபதி மாளிகையிலேயே வைத்துவிடுவதுதான் மரபு.ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று செல்லும்போது,தன்னுடன் எந்த பரிசு பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.
இந்நிலையில்,கடந்த மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதிபா பாட்டீல்,தமக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருகளில்,விலை மதிப்புடைய 150 பரிசு பொருட்களைஅவர் தற்போது தங்கியிருக்கும் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் உள்ள தமது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

பிரதிபாவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் சாசன நிபுணர்கள்இது மரபுக்கு மாறானது என்று  கூறியுள்ளனர்.
அதே சமயம் பிரதிபா அந்த 150 விலை மதிப்புமிக்க பரிசு பொருட்களை கடனாகத்தான் எடுத்துச் சென்றுள்ளதாகவும்,அவரது குடும்பத்தினர் நடத்தும் மியூசியத்தில் இவை காட்சி பொருளாக வைக்கப்பட இருப்பதாகவும்இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் ஒப்பந்தம் ஒன்றில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் பிரதிபாவுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதிபா மீது அவர் பதவி காலத்தில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதாக்வும்,தமது குடும்பத்தினர்களை அதிக அளவில் ஜனாதிபதி மாளிகையில் தங்க வைத்ததாகவும்,வெளிநாட்டிற்கும் அரசு செலவில் குடும்பத்தினரை அழைத்து சென்றதாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் ஓய்வுபெற்ற பின்னர் தங்குவதற்காக புனேவில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர் இடத்தை கேட்டார் பிரதிபா.இது குறித்து ஊடகங்களில் செய்தி  வெளியாகி சர்ச்சை ஏற்பட்டபின்னர் புனே இடத்தை கோருவதை பிரதிபா கைவிட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: