தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.12

கொபி அனான் வெளியேற்றம் ஐ.நாவிற்கு அடிசறுக்கல்


சிரியாவின் அமைதி முயற்சியில் பணியாற்ற கடந்த 23 ம் திகதி மாசி மாதம் பொறுப்பேற்ற முன்னாள் ஐ. நா செயலர் கொபி அனான் நேற்று தாம் இந்த முயற் சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.சிரியாவி ன் அமைதிக்காக இவரால் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளும் இத்தோடு அறுந்த காற்றா டியாக காற்றில் பறந்து தொலைந்தது.ஐ.நா பாதுகா ப்பு சபையில் வல்லரசுகள் தமக்குள் மோதிக்கொள் வதால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்ட கொபி
அனான், இனியும் தாம் அந்தப் பதவியில் தொடர் வதில் யாதொரு முகாந்திரமும் கிடையாது என்றும் நேற்று கருத்து வெளியிட்டார்.
கடந்த 17 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்பு சபையில் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாதபடி ரஸ்யாவும், சீனாவும் மூன்று தடவைகள் வீட்டோ சமர்ப்பித்துள்ளன.
ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஸ்யா, சீனா ஒரு பக்கமாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மறுபக்கமாகவும் பிளவுபட்டு நிற்பதால் அனான் தலைமையிலான அணி வெறும் கண்துடைப்பு அணியாகவே இருந்தது.
கொபி அனானின் வெளியேற்றத்தை நேற்று ஐ.நா செயலர் பான் கி மூன் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
அனானின் வெளியேற்றம் குறித்து ரஸ்யா – சீனா ஆகிய நாடுகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளன, சிறந்த இராஜதந்திரியான அவருடைய வெளியேற்றம் வருத்தமான செயல் என்றும் கூறியுள்ளன.
மேலை நாடுகள் சிரியா தொடர்பான அணுகு முறையில் நீதியான நிலைப்பாடு ஒன்றை எடுக்கவில்லையென ரஸ்யா குறை கூறுகிறது, சர்வாதிகாரியும், போர்க் குற்றவாளியுமான ஆஸாட்டை ரஸ்யா – சீனா தமது சுயநலத்திற்காக ஆதரிக்கின்றன என்று அமெரிக்கா குறை கூறுகிறது.
அனானின் வெளியேற்றம் தவறானது என்ற கண்டனத்தை பல நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஐ.நா பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கருவி என்பது சிரிய – பாலஸ்தீன விவகாரத்தில் அம்பலப்பட்டுள்ளது, இதற்குப் பிறகும் உலகின் மற்றைய நாடுகள் அனைத்தும் வீட்டோவுக்கு எதிராக அணி திரள மறுப்பது ஏன் என்பது முக்கிய கேள்வியாகும்.
வீட்டோவை விலத்திவிட்டால் உலகில் உள்ள அத்தனை நாடுகளும் போர்க்குற்றவாளிகளாக நிற்க நேரிடும் என்பதால் சுயநலத்தின் வடிவமான வீட்டோ அழியாத வரம் பெற்றுள்ளது.
ஒரு நாடு போர்க் குற்றம் புரிந்துவிட்டு வீட்டோ அதிகாரமுள்ள ஐந்து நாடுகளில் ஒரு நாட்டுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் ஐ.நாவில் படுகொலை லைசென்சை இலகுவாக பெற்றுவிடலாம்.
பாலஸ்தீன பிரச்சனையில் அமெரிக்காவின் வீட்டோ இஸ்ரேலுக்கு திறந்தவெளி படுகொலை லைசென்சை வழங்கியுள்ளது போல சிரியாவுக்கு ரஸ்யாவும், சீனாவும் வழங்கியுள்ளன.
சொந்த நாட்டு மக்களை கைது செய்து தூக்கில் போட்டு, கழுத்தறுத்து கொன்று ஆஸாட் ஆடும் நாடகங்களை கண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இயலாத ஐ.நா சிரியாவைவிட மோசமான நிர்வாகக் கேடுள்ள தாபனமாக இருப்பதையே காட்டுகிறது.
இலங்கை அமைதி முயற்சியில் நோர்வே வெளியேறியது போல இப்போது அனான் வெளியேறியுள்ளார், இந்த வெளியேற்றம் சிறீலங்காபோல படுகொலையால் தீர்வுகாணும் காட்டுமிராண்டி தீர்வை அரங்கப்படுத்தியுள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்கின்றன அநீதிகள்…
நன்றி:அலைகள்

0 கருத்துகள்: