தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

பசிபிக் பெருங்கடலில் பெரும் நுரைக்கல் திட்டு - அதிர்ச்சியில் அறிவியல் அறிஞர்கள்


பசிபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து வருவதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.குறைந்த எடை கொண்ட நுரைக்கல்லின் சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்து இந்தப் பெரும் திட்டை ஏற்படுத்தியுள்ளன.எரிமலையிலிருந்து வெளியான குழம்பு காற்றுக் குமிழிகளுடன் இறுகிப் போய் உருவான நுரைக்கல் படிமங்களே பெரும் திட்டாக தற்போது மிதந்து வருகிறது.இப்படியான ஒரு திட்டு கடலில் மிதந்து
வருவதை தமது 18 ஆண்டுகால கடல் பயணத்தில் தான் கண்டதில்லை என்று நியுசிலாந்து கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த எரிமலை பாறைத் திட்டுக்கல் கடலில் பெரிய ஐஸ் படலம் மிதந்து வருவது போல இருந்தாலும்அதனால் கப்பல்துறைக்கு எந்த அபயாமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கடலுக்கு கீழே இருக்கும் எரிமலையிலிருந்து இந்தப் பாறைகள் வந்திருக்கலாம் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

0 கருத்துகள்: