தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி இறுதி ஆட்டத்திலும் தோல்வி


லண்டன் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஹாக்கி ப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டு கடைசி இடத்தை பிடித்துள்ளது இ ன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி போட்டிக ளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய து. கடைசி ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டபோ தும் 2-3 எனும் கோல் கணக்கில்  தென் ஆப்பிரிக்கா விடம் தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம் பி பிரிவில் இடம்பெற்ற ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி
விளையாடிய ஆறுஆட்டங்களிலும் தோல்வியையே கண்டுள்ளது.
இதனால் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 11வது இடத்திலும் இந்திய அணி கடைசி இடத்திலும் இடம்பிடித்திருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே லண்டனில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான ஹாக்கியில் இந்தியா தங்கம் பதக்கம் வென்றதும் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கடைசியாக இவ்விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதும் குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்: