தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.12

25 வருடங்களுக்கு முன்னரே அல்சைமர் வியாதியை இணங்காண முடியும் : மருத்துவர்கள் அறிவிப்பு


முதியவர்களை அதிகமாக தாக்கும் Alzheimer (ஞாபக மறதி) வியாதிக்கான அறிகுறியை 25 வருடங்களுக் கு முன்னரே கண்டுபிடித்துவிட முடியுமென புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவவியலாளர்கள் வெளி யிட்டுள்ளனர்.வாஷுங்டன் மருத்துவியல் கல்லூரி மாணவர்கள் இது தொடர்பில் சுமார் 128 பேரிடம் ஆ ராய்ச்சிகள் மேற்கொண்டு இம்முடிவை அறிவித்துள் ளனர்.அவர்களுடைய ஆராய்ச்சி முடிவின் படி அல் சைமர் நோய்க்கான அறிகுறியை ஒருவரின் 30,40
வயதுகளிலேயே கண்டுபிடித்து சிகிச்சையை தொடக்க முடியுமென நம்பிக் கை வெளியிட்டுள்ளனர். 

பொதுவாக ஒருவரின் 60 வயதின் பின்னர் அல்சைமர் நோய் இணங்காணப்பட்டு வருகிறது. முதியவர்களை பெரும்பாலும் தாக்கும் இந்நோயினால், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இவர்களுக்கென தனி உலகத்தையே உருவாக்கி வருகிறார்கள். காலையில் எங்கு இருக்கின்றோம், இப்போது எங்கு இருக்கிறோம். முன்னால் நிற்பவர்கள் யார் யார் என்பதையே திடீர் திடீரென மறந்துவிடும் தீவிரத்தன்மை கொண்டது அல்சைமர் நோய்.

0 கருத்துகள்: