தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.7.12

அமெரிக்கா: 12 ஆண்டுகளாக ஒரே ஊசி, சிரிஞ்ச் பயன்படுத்தி எய்ட்ஸ் நோயை பரப்பிய பல் டாக்டர் மீது விசாரணை.


அமெரிக்காவில் கிளினிக்கில் ஒரே நீடில், சிரிஞ்சை பயன்படுத்தி வந்த பல் டாக்டரால் பலருக்கு எச்ஐவி உள்பட பல நோய்கள் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாண தலைநகர் டென்வரை சேர்ந்தவர் ஸ்டீபன் ஸ்டீன்.பல் டாக்டர். இவர் டென்வரில் 2 இடங்களில் கிளினிக் வைத்திருந்தார். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கிளினிக்கில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு

பல் நோய்க்கு சிகிச்சை அளித்துள்ளார். பலருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால், ஒரே நீடில், சிரிஞ்சை பயன்படுத்தி உள்ளதை மருத்துவத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஸ்டீபன் ஸ்டீனிடம் சிகிச்சை பெற்றவர்களை மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களில் பலர் எச்ஐவி, ஹெபடிடிஸ் பி, ஹெபடிடிஸ் சி போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. உடனடியாக ஸ்டீபனிடம் சிகிச்சை பெற்ற 8,000க்கும் அதிகமான நோயாளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், நோய் தொற்று ஏதாவது இருக்கிறதா என்பதை உடனடியாக மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். ஸ்டீபனின் டாக்டர் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அவருடைய கிளினிக்கு சீல் வைக்கப்பட்டது. இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: