தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.7.12

மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தான் எம்.பி., பலி


ஆப்கானிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு தாக் குதலில், அகமதுகான் சமாங்கனி என்ற எம்.பி., உட் பட, 20 பேர் பலியாகினர் ஆப்கானிஸ்தானில்,அய்பே க் நகரில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் நேற்று காலை, அப்பகுதி எம்.பி.,யும், நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியுமான, கமாண்டர் அகமதுகான் சமாங்கனி மகளின் திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணம் முடி ந்ததும், அகமதுகான், முதல் தளத்தில் நின்று
கொண் டிருந்தபோது, அவரை அணுகிய மர்ம நபர், தன் உடலில் மறைத்து வைத்திருந் த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில், அகமதுகான் சமாங்கனி உட்பட, பலர் பலியாகினர்.

இதுகுறித்து, அப்பகுதி குற்றப்பிரிவு போலீஸ் இயக்குனர் குலாம் முகமது கான் கூறுகையில், "திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கமாண்டர் அகமதுகான் சமாங்கனியை, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். அவருடன், அரசு அதிகாரிகள் உட்பட, 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர்

இந்த சம்பவத்திற்கு உடனடியாக, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது தலிபான் தாக்குதல் தான்' என்றார்.

0 கருத்துகள்: