தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.7.12

மலேசியாவில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து. பொதுத்தேர்தல் நெருங்குவதால் அதிரடி அறிவிப்பு


மலேசியாவில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களை, இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசு நடவடிக்கை எடுத்துவந்துள்ளது என்று நீண்ட காலமாகவே செயற்பாட்டாளர்கள் அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.அங்கு விரைவில் பொதுத் தேர்தல்

நடைபெறவுள்ள சூழலில், தமது கட்சியில் சீரமைப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று வெளிக்காட்ட பிரதமர் நஜீப் ரஜாக் ஆர்வமாக உள்ளார்.
எனவே புதிய ஜனநாயகத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ஒரு முதல் படி என்று கூறி, நேற்று-புதன்கிழமை, இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.
மலேசியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவர் சார்ந்திருக்கும் கட்சியே அங்கு ஆட்சி செய்து வருகிறது.
அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியவர்களை இந்த தேசத் துரோகச் சட்டத்தின் மூலம் ஒடுக்கி வந்ததாலேயே, ஆளும் கட்சியால் தொடர்ந்து பதவியில் இருக்க முடிகிறது என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன.
ஆனால் எதிர்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆளும் தரப்பு, பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு நாட்டில், இந்தச் சட்டம் ஸ்திரத்தன்மையை நிலைத்திருக்க வைத்தது என்று கூறுகிறது.
உணர்வுபூர்வமான இனப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை இந்தச் சட்டம் நசுக்கியது.

சீர்திருத்தங்கள் வருகிறது?

தேவை தற்போது இல்லை என்று, பிரதமர் நஜீப் இப்போது கூறுகிறார்.
நாட்டில் அடுத்த தேர்தலுக்கு முன்னர் தான் ஒரு சீர்திருத்தவாதி என்று காட்ட அவர் விழைகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு கொடுங்கோல் சட்டங்கள் என்று பார்க்கப்பப்பட்ட பலவற்றை பிரதமர் நஜீப் ஏற்கனவே ரத்து செய்துள்ளார்.
ரத்து செய்யப்படும் தேசத் துரோகச் சட்டத்துக்கு பதிலாக தற்போது தேசிய ஒற்றுமைச் சட்டம் அல்லது தேசிய இணக்கப்பாட்டு சட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.
இந்தப் புதிய சட்டம் சுதந்திரமான பேச்சுரிமையை அளிக்கும் என்றும், அனைத்து இன மற்றும் மதத்தவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் எனவும் நஜீப் கூறுகிறார்.
ஆனால் அங்கு பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு, அரசால் கொண்டுவரப்படும் பல மாற்றங்கள் ரத்து செய்யப்படக் கூடும் என்கிற கவலைகளும் இருக்கின்றன.

0 கருத்துகள்: