ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்
கண்டனம்வெளியிட்டுள்ளன.இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணு வம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ள பகுதிகளில் சிறு புத்தர் சிலை அமைத்து அவர்களுடைய வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பின்னர் பொதுமக்களுடைய இடங்களைச் சுவீகரித்து இவ்வாறான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுவந்தது.

ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோவிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தகோயில் அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பௌத்த பேரினவாதத்தின் மிதமிஞ்சிய செயலாகவே கருதப்படவேண்டும் என்று மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முற்றுமுழுதாக குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் மிகவும் விசாலமாக அமைக்கப்பட்டுவரும் இப்பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். முன்னர் அமைந்திருந்த குறித்த இந்து ஆலயத்தினை மீண்டும் பழைய இடத்தில் முன்பிருந்த விதமாக அமைக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நன்றி: பதிவு.காம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக