இலங்கையில் மேலும் ஐந்து தமிழ் இணையத்தளங்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டஇலங்கை உரிமைகளுக்கான வலை யமைப்பு ( NFR - Network for Rights) தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com, http://www.athirvu.com, http://www.saritham.com, http://www.ponguthamil.com , http://www.pathivu.com ஆகிய குறித்த இணையத்தளங்கள் இலங்கையில் எந்தவொரு இணைய வழங்குனர் ஊடாகவும் பார்வையிட முடியாதென்பதுடன், Proxy Servers களால் மட்டுமே இலங்கை மக்கள் பார்க்க கூடிய
நிலைமை தோன்றியுள்ளது. இலங்கை அரசினால் அமல்படுத்தும் இவ்வாறான ஊடக தணிக்கை, ஆரோக்கியமற்ற வளர்ச்சியையே காண்பிப்பதாக NFR SriLanka கண்டனம் விடுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு தமிழ்நெட் இணையத்தளம் இலங்கையில் தடை செய்யப்பட்டது. சிங்கள இணைய ஊடகங்களான http://lankaenews.com http://www.lankanewsweb.com and http://www.srilankaguardian.org ஆகியனவும் தொடர்ந்து தடை செய்யப்பட்டன.

இலங்கை செய்திகளை வெளியிடும் எந்தவொரு இணையத்தளமும் முறைப்படி சிறிலங்கா அரசிடம் அதற்குரிய அனுமதி பெற்று தம்மை பதிவு செய்திருக்க வேண்டுமென புதிய அறிவிப்பை கடந்த 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசு வெளியிட்டது.
இணையத்தளங்களை தடை செய்வதை எதிர்த்து சுதந்திர ஊடக கண்காணிப்பு அமைப்புக்கள் தாக்கல் செய்த வழக்கை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வு பிரிவினரால் பின்தொடரப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான ஞானசிறி கொத்திகொட, லசந்த ருகுனுகே மற்றும் லங்காதீப பத்திரிகையின் செய்தியாளர் சுஜித் மங்கள ஆகியோருக்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக