தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.6.12

பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு : இன்று முதல் அமுல்?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை கு றைப்பை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட் டருக்கு 2 ரூபாய் 46 பைசா குறைத்துள்ளதாக அறிவித்தி ருப்பதை அடுத்து, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை வாட்வரியையும் சேர்த்து 3 ரூபாயாககுறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக் கு வந்துள்ளது. டெல்லி யில் 70 ரூபாய் 24 பைசாவாக இருந்த  ஒருலிட்டர் பெட் ரோல் புதிய
விலைகுறைப்பின் படி, 67 ரூபாய் 78 பைசாவாகவும், கொல்கத்தாவில் 75 ரூபாய் 81 பைசாவாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், புதிய விலை குறைப்பின் படி, 72 ரூபாய் 24 பைசாவாகவும் மும்பையில் 76 ரூபாய் 45 பைசாவாக இருந்த ஒருலிட்டர் பெட்ரோல் புதிய விலை குறைப்பின் படி, 73 ரூபாய் 35 பைசாவாகவும், சென்னையில் 75  ரூபாய் 45 பைசாவாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் புதிய விலை குறைப்பின் படி, 72 ரூபாய் 27 பைசாவாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

       சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துகொண்டே இருப்பதால், பெட்ரோல் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

0 கருத்துகள்: