தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.6.12

சிரிய எல்லைக்கு படைகளை அனுப்பிய துருக்கி: டமஸ்கஸ் நீதிமன்றம் தாக்குதல்


நேற்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் அமைந் துள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலுள்ள கார் தரிப்பி டத்தில் கிளர்ச்சியாளர்களால் ஒர் குண்டு வெடிப்புச் சம் பவம் நிகழ்ந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிரிய அரச ஊடகம் தெரிவிக்கையில் சிரியாவின் அண்மை நாடா ன துருக்கி சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாட்டிற்கு எதிராக சிரிய எல்லையிலுள்ள போராளிகளுக்கு உதவு ம் நோக்கில் தனது படைகளையும் விமான எதிர்ப்பு ஏவு கணைகளையும்
அவர்களுக்கு வழங்க தயாரன போது இக் குண்டு வெடிப்பு
நிகழ்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக சிரியாவில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் மூலம் அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் கை சிறிது ஓங்கியுள்ளது. இந்நிலையில் சிரிய அரச ஊடகம் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தீவிரவாதிகளின் தாக்குதல் என சித்தரித்துள்ளது. இச் சம்பவம் நிகழ்ந்த கார் தரிப்பிடம் சிரிய அதியுயர் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உபயோகிக்கும் இடமாகும். எனினும் சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சென்ற வெள்ளிக்கிழமை மத்திய தரைக் கடலின் வான் பகுதியில் பறந்த துருக்கியின் இராணுவ விமானம் ஒன்றை சிரிய அரசு சுட்டு வீழ்த்தியதை அடுத்து துருக்கியின் இராணுவம் சிரிய எல்லைப் பகுதிக்கு அண்மைக்கு அதிகமாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் 30 இராணுவ கவச வாகனங்கள், டிரக் வண்டிகள்,ஏவுகணை தாங்கி வாகனங்கள் என்பன அடங்கும்.

0 கருத்துகள்: