தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.12

காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி : அறிவித்தார் சோனியா காந்தி


இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கா ன காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து தனது நிதியமைச்சு பொறுப்பை பிரணாப் முகர்ஜி எதிர்வரு ம்  24 ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகவும், 25 ம் தேதி ஜனாதிபதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய் யவிருப்பதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் அடுத்த நிதி அமைச்சர்
பொறுப்பை யாருக்கு வழங்குவது என்றும் காங்கிரஸ்பரிசீலனை செய்து வருகிறது.

 பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரணாப் முகர்ஜிக்காக தன்னிடம் ஆதரவு கேட்டதாக தெரிவித்த மாயாவதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகள் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கூறினார்.

இதேவேளை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் அறிவிக்கப்பட்டவுடன், பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு பிரணாப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிரதமரின் கோரிக்கை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவதை அடுத்து வரும் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை-19 ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு வரும் 16 ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ.,தலைமையிலான தே.ஜ.,கூட்டணியிலும் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. இரண்டு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு வேட்பாளரை பரிந்துரைத்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக நடந்த காங்கிரஸ் காரியமிட்டி கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் சோனியாவுக்கு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்: