தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.12

அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி. பாகிஸ்தானுக்கு மிரட்டல்.

அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டு மே பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா திட்டவட்டமாகக் கூறினார்.அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது, அமெரிக்கா கூறுவதை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அதற் கு பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே நிதி உதவி வழங்கும் விஷயத்தில் எச்சரிக் கையாக
இருக்க வேண்டியுள்ளதுஎன்று பனேட்டா குறிப்பிட்டார்.


 பாகிஸ்தானுக்கு 2013-ம் ஆண்டுக்கு 350 கோடி டாலர் தொகையை ராணுவ மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு அளிக்கலாம் என ஒபாமா நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரே இக்கருத்தை வெளியிட்டிருப்பதால், பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைப்பது மேலும் சிக்கலாகியுள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கடந்த 7 மாதங்களாக நேட்டோ படை வாகனங்கள் செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இதனால் கூடுதலாக மாதத்துக்கு 10 கோடி டாலர் கூடுதலாக செலவாவதாக தெரிவித்துள்ளார். இப்போதுதான் கூடுதல் செலவு பற்றிய விவரம் முதல் முறையாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கடந்த நவம்பர் மாதம் நேட்டோ படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நேட்டோ வாகனங்கள் பாகிஸ்தான் தரை வழியைப் பயன்படுத்த தடை விதித்தது.

 இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. இதையடுத்து கடந்த மாதம் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் கூட பாகிஸ்தான் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இம்மாத தொடக்கத்தில் இந்தியா, ஆப்கன் உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பனேட்டா, அமெரிக்காவின் பொறுமையை பாகிஸ்தான் வெகுவாக சோதித்துப் பார்க்கிறது என்று எச்சரித்திருந்தார்.

 கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தானில் பழங்குடியின பகுதியில் ஆளில்லா விமானம் மூலமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பனேட்டா கூறியுள்ளார்.

 இரு நாடுகளிடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்குக் கிடைக்கவிருந்த நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது மேலும் சிக்கலை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தான் தனது எல்லையை மூடும் முன்பு ஆப்கனுக்கு அனுப்ப வேண்டிய அனைத்துப் பொருள்களும் கராச்சி துறைமுகத்துக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஆப்கனுக்குக் கொண்டு செல்லப்படும்.

 இப்போது ஆப்கனின் வடக்குப் பகுதிக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கு ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் செலவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியிலிருந்து அமெரிக்க படை வீரர்கள் படிப்படியாக நாடு திரும்ப உள்ளனர். பாகிஸ்தான் சாலை போக்குவரத்து பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் செலவு அதிகரிக்கும் என்று தோன்றுகிறது.

0 கருத்துகள்: