தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.5.12

வடகொரியா அடுக்கடுக்காக ஏவுகணைகளை பறக்கவிட முயற்சி


வடகொரியா போலி ஏவுகணை ஒன்றை பறக்கவிட்டு, அது கடலில் விழுந்தது பழைய கதையாகிவிட்டது.உ லகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தற்போ து பல புதிய அணு குண்டு காவிய ஏவுகணைகளை அ து பறக்கவிட்டு புரட்சிக்கப்போவதாக அமெரிக்கா எச்ச ரித்துள்ளது.அமெரிக்க யோன் கொப்பிங் பல்கலைக்க ழகத்தின் கொரிய – அமெரிக்க சாட்லைட் கண்கானிப்பு பிரிவு கடந்த ஏப்ரல் 30 ம் தேதி
வடகொரிய ஏவுகணை களை கண்கானித்துள்ளது.நுட்பமான இடைவிடாத
கண்கானிப்பில் வடகொரி யாவின் இரகசியமான முயற்சிகள் பென் யோங் நகரத்தில் நடைபெறுவதை த மது சாட்லைட் கண்டு பிடித்துள்ளதாக இப்பல்கலைக்கழகம் கூறுகிறது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் பரிசோதனைகளை செய்து, உலகத்தை ஏமாற்றி வடகொரியா அணு வல்லரசாக மாறிவிடும் என்றே கருதப்படுகிறது.
இதுபோல உலகத்தை ஏமாற்றும் வேலையில் கணிசமாக வெற்றி பெற்று படிப்படியாக முன்னேறி வருகிறது, சிரிய சர்வாதிகார ஆட்சி.
அந்த நாட்டில் :
யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் நிலை கொண்டாலும் அது பற்றி யாதொரு கவலையுமின்றி நேற்று முன்தினம் வடபுல சிரியாவில் உள்ள இட்லிப் நகரில் 20 பொது மக்களை நயவஞ்சகமாக கொன்று தள்ளியது சிரியப் படை.
அதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கோம்ஸ் நகரத்தில் 15 அப்பாவிகளை கொன்றொழித்தது.
இந்தத் தகவல்கள் இங்கிலாந்தில் அம்பலத்திற்கு வர, இன்று கண்காணிப்பாளர் போன வாகனமே வீதிக் குண்டு தாக்குதலை சந்திக்க நேர்ந்தது.
டென்மார்க்கில் இருந்து போன கண்காணிப்பாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார், வாகனம் மட்டும் சேதமாக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னால் இருந்தது யாரென்று தெரியவில்லை.
சிறீலங்காவில் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு போனது போலவே சிரியாவிற்கும் உளவறிய போயுள்ளதா என்ற சந்தேகம் சிரிய அரசுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

0 கருத்துகள்: