தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.5.12

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு அமெரிக்கா தடை


நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான சோட்டா ஷகீல் (57), இப்ராஹிம் டைகர் மேமன் (52) ஆகியோரை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக அறிவித்து, அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசின் வெளிநாட்டு சொத்துகள் கட்டப்பாட்டு கருவூல அலுவலகம் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள்சட்டத்தின் கீழ் இவர்களை கடத்தல்காரர்களாக

அறிவித்து தடைவிதித்துள்ளது.  "தெற்காசியாவில் நடைபெறும் போதை மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக கருவூல அலுவலகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று கருவூல அலுவலகத்தின் இயக்குநர் ஆதம் சூஸ்பின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 அமெரிக்க கருவூல அலுவலகம் விதித்துள்ள தடையின்படி, அமெரிக்கப் பிரஜைகள் அவர்கள் இருவருடன் வர்த்தக மற்றும் நிதி பரிவர்தனைகளில் ஈடுபட தடைவிதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அவர்களுடைய சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்பட்டுவிடும்.  தாவூத் நடத்தும் "டி-கம்பெனியின்' குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003 அக்டோபரில் தாவூத் இப்ராஹிம் (56) சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
 2006 ஜூனில் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல்காரராக அறிவிக்கப்பட்டார். அப்போதே தாவூத் நடத்தும் நிறுவனம் போதைப் பொருள் கடத்தல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.  சோட்டா ஷகீல், தாவூதின் டி-கம்பெனிக்கும் மற்ற பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். டைகர் மேனன், டி-கம்பெனியின் தெற்காசிய பிரிவு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
இவர்கள் இருவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் டைகர் மேமன் 1993 மும்பை குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வருகிறார். இவர்கள் இருவருக்கு எதிராகவும் இண்டர்போல் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

0 கருத்துகள்: