தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.12

ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்


ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து அவரை வீட்டினுள் இருக்குமாறு கூறியுள்ளனர்.
மௌலானா நசீருதீனை காவல்துறை அழைத்து பேசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர்கள் அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். அவரின் குடும்பத்தினர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் நசீருதீனை அழைத்து தற்போதைய சூழ்நிலைக் குறித்து  காவல்துறையினர் பேசியுள்ளனர் என்றனர்.
மேலும் காவல்துறை வழக்கம்போல் அப்துல் நயீம் ஜுனைத் மற்றும் முஹம்மத் இம்ரான்  என்னும் இரு முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர் என்றும் அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் இந்த மெத்தன போக்கே காரணம்
இதற்கிடையே கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட முன்னால் ராஜ்ய சபா எம்.பி. அஜிஸ் பாஷா உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சென்றனர். இதற்கு ஏ.சி.பி. இக்பால் சித்திக்கி அனுமதி மறுத்துவிட்டார். அஸிஸ் பாஷா தங்களை கலவரம் நடந்த இடத்தை பார்வையிட அனுமதிக்கக் கோரி இக்பாலுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அவர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவர்களும் அனுமதி மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த போக்கிற்கு அஜிஸ் பாஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையின் இந்த சார்பு போக்கே கலவரம் நடைபெற காரணம் என்றும் கலவர வெறியர்கள் சயிதாபாத்திலும் மற்றும் மதன்னபெட்டிலும் மதக் கலவரம் நடத்த இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தும் அமைதியாக இருந்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும்  காவல்துறையின் இந்த மெத்தன போக்கே அப்பாவி முஸ்லிம் மக்கள் தாக்கப்படுவதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் கலவரம் நடத்திய வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்_இன் உறுப்பினர்களை விசாரித்தால் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கலவரம் செய்தவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News@thoothu

0 கருத்துகள்: