தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.12

சவுதி அரேபியா: நண்பரை கொலை செய்த சகோதரர்களுக்கு தலை துண்டித்து தண்டனை.


சவூதியில் ‌வியாபார போட்டியில் சகநண்பரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி இருவருக்கும் தலைதுண்டித்து தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியில் கொலை,கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களுக்கு‌ கொடூர தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சவூதிஅரேபியான் ஜெட்டா நகரைச்சேர்ந்தவர்கள் முகமது, சலீம் அல்-மதிரிபி. இவர்கள் ஷாத்-அல் மதிரிபி என்ற வியாபாரியை , முன்விரோதம் மற்றும் வியாபார போட்டியால்ஏற்பட்ட தகராறில் சுத்திய

லால் தாக்கி கொலை செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது ஷரியா சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நேற்று கூர்மையான வாளினால் தலை துண்டித்து தண்டனை விதிக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சவூதியில் கடந்த 2011-ம் ஆண்டில் 76 பேருக்கு இது போன்ற தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு 79 பேருக்கு கொடூர தண்டனை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

0 கருத்துகள்: