தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.12

இந்திய சமையல் கலைஞருக்கு வெள்ளை மாளிகையில் வரவேற்பு.


இந்திய சமையல் நிபுணர் சஞ்சீவ் கபூர், அமெரிக்க வெள்ளை மாளிகை சமையலறையை சுற்றி பார்த்தார்.ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகைக்கு, 30 ஆயிரம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பிரபல இந்திய சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரும் இந்த அழைப்பை ஏற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் உள்ளிட்டோர், சஞ்சீவ் கபூரை வரவேற்றனர். அதிபர் ஒபாமாவுக்காக சமையல் தயாரிக்கப்படும் சமையலறையை,
சஞ்சீவ்கபூர் பார்வையிட்டார். ஒபாமாவின், மனைவி மிச்சேலுடைய சமையலறை தோட்டத்தையும் சஞ்சீவ் பார்வையிட்டார். தான் எழுதிய சமையல் புத்தகங்களை, வெள்ளை மாளிகை சமையல் கலைஞர்களுக்கும், மிச்சேலுக்கும், சஞ்சீவ் கபூர் அளித்தார்.

இது குறித்து சஞ்சீவ் கபூர் குறிப்பிடுகையில், "சமையலறை பெரியதா, சிறியதா என்பது விஷயமல்ல. ஒரே நேரத்தில், 4,000 பேருக்கு சமைப்பது என்பது சாதாரண காரியமல்ல' என்றார்.

0 கருத்துகள்: